Koha home

சுன்னாகம் பொது நூலகத்திற்கு வருக..!!

புதிய வருகை

Loading...

எமது தொலை நோக்கு / OUR VISION

எல்லோர்க்கும் பயனுடைத்தான நுாலக சேவைகளை எல்லோரினதும் பங்கேற்புகளினுாடாக ஏற்படுத்தி இலங்கையின் முன்னணிப் பொது நுாலகமாக மிளிர்தல்

எமது செயல் நோக்கு OUR MISSION

மனித குலத்தின் மகத்தான விழுமியங்களை உணர்ந்தும் எதிர்கொள்ளும் சவால்களை வென்றுயர்ந்தும் உன்னத நிலைகளை எய்தும் வண்ணம், அறிவிலுயர் சமுதாயத்தை உருவாக்குமுகமான தேசத்தினதும் பிரதேசத்தினதும் நுாலகக் கட்டமைப்பை ஏற்படுத்தல்.

எமது இலக்குகள் OUR GOALS

 யுனெஸ்கோ பொது நுாலகக் கொள்ளை விளக்கத்தின் அடிப்படையிலும், இலங்கை நுாலக சேவைகள் பிரமாணங்கள், வடமாகாண நுாலக சேவைகள் பிரமாணங்கள், வழிகாட்டு விதிகளின் அடிப்படையிலும் செயற்பட்டு உள்ளூராட்சிப் பிரதேசத்திலும், தேசத்திலும் முன்னணி வகிக்க கூடியதான பொத நுாலக இயக்கத்தைக் மேன்மேலும் கட்டி எழுப்புதல்.

 நுாலக கட்டடத்தையும் ஏனைய வளங்களையும் உச்ச பயன்பாட்டிற்கு உட்படுத்துவதுடன், பயனுடைய நுாலக சேவைகளை யாவருக்கும் வழங்குதல்.

 மரபு சார்ந்த நுாலக வளங்களைத் தொடர்ந்து பேணுவதுடன், நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களான வளங்களையும் பயன்படுத்தி தகவல் தேடுகைகளுக்கு உதவுதலும் புத்தாக்க திறன்களை வளர்க்க தேவையான அனைத்து முயற்சிகளை உருவாக்குதலும்.

 அனைத்து வகையினருக்குமான அறிவுத் தேடல்களுக்கு உகந்த வளங்களை நுாலகம் கொண்டிருக்கும் முகமாக, சமுதாயத்தின் பங்கேற்றலுக்கான சாத்தியமான வழிகளை உருவாக்கிப் பேணுதலும் அபிவிருத்தியின் நன்மைகள் யாவருக்கும் சென்றடையச் செய்தலும்.

 தனித்துவமிக்க இப் பிரதேசத்தின் ஆற்றல்கள், வளங்கள், சாதனைகளை யாவருமறியத்தக்கதாக வெளிப்படுத்த, கலை, கலாசார, இலக்கிய வெளிப்பாடுகளை ஊக்குவிக்க, சேகரித்து காட்சிப்படுத்த, ஆவணப்படுத்த தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

 2020ம் ஆண்டில் மக்கள் பங்கேற்புடனான செயற்குழுவினுாடாக விசேட செயற்றிட்டங்களைச் செயற்படுத்துதல். நுாலகத்திற்கான காணியினைப் பெற்றுக்கொள்வதுடன் நுாலகக் கட்டிடத்தை புதுபித்தல் நுாலகசேவையினை மேலும் பிரிவு ரீதியில் வகைப்படுத்தல்.

இந்த இணையபக்கம் தன்னியமாக்கப்பட்ட இலத்திரனியல் நூலகத்தின் ஒரு பகுதியாகும் , இது நூலகத்தின் இருப்புக்களைத் தேட உங்களை அனுமதிக்கிறது. இங்கு அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் நூல்களின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.


மேற்கானும் தேடல் பட்டியில் இருந்து சிங்கள / தமிழ் / ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி நூலகத்தில் கிடைக்கும் தகவல் வளங்களை நீங்கள் தேடலாம்.


ஒரு தலைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், கிடைக்கக்கூடிய பிரதிகள் பற்றிய விபரங்களை அறியலாம். உங்களிடம் நூலக அட்டை இல்லையென்றால், முழு நேர சேவையின் போது தகவல் மேசையில் ஒன்றை பதிவு செய்யலாம்.

Log in to your account:

நுாலகத்தின் வரலாறு-

சுன்னாகம் பொதுநுாலகம் சுன்னாகம் பட்டணசபையால் 01-10-1964 இல் ஆரம்பிக்கப்பட்டது. அச் சமயத்தில் பட்டணசபையின் தலைவராக செனட்டர் பொ.நாகலிங்கம் கடமையாற்றினார். யாழ் - காங்கேசன்துறை பிரதான சாலையில் ஆயுர்வேத வைத்தியர் இல்லத்தில் சிலகாலமும் தற்காலிகமாக நுாலகம் இயங்கிவந்தது. நுாலகத்திற்கான நிரந்தரக் கட்டடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.வி.மா.குமாரசாமி அவர்களின் 3 பரப்புக்காணி கொள்வனவு செய்யப்பட்டது. பொது மக்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்று நுாலகத்துக்கான அமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந் நுாலக கட்டட வரைபடத்தை கொழும்பு கட்டடக் கலைஞர் திரு.NSC.பெரேரா வரைந்துள்ளார்.

18.01.1973 இல் யா/ஸ்கந்தவரோதயக் கல்லுாரி அதிபராக இருந்த திரு.வி.சுப்பிரமணியம் B.A. அவர்களால் நுாலகத்துக்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டு வேலைகள் நடைபெற்றன. 1974 June மாதமளவில் கட்டட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளூராட்சி ஆணையாளர் திரு.டி.அல்விஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஆரம்ப காலத்திலிருந்து வெளிநாட்டுத் துாதரகங்களாலும் நுாலக சேவைகள் ஆவணமாக்கல் சபையாலும் வழங்கப்பட்ட பெறுமதியான நுால்கள் அன்பளிப்பாகக் கிடைக்கப் பெற்றுள்ளன. சபையின் நிதி மூலமும் உள்ளூராட்சி நன்கொடை மூலமும் தமிழ், ஆங்கில நுால்கள் கொள்வனவு செய்யப்பட்டன. போதிய தளபாடங்கள் செய்யப்பட்டு பாவனையிலுள்ளன. பொது மக்களிடமிருந்து கட்டட அமைப்புக்கு வாசகர்களிடமிருந்து நிதி உதவிகள் கிடைத்துள்ளன. அவ்வாறே பொறுமதியான பல நுால்கள் வாசகர்களால் நுாலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

பட்டணசபை நிருவாகிகளும் பின்பு மாவட்ட அபிவிருத்திச் சபை நிருவாகிகளும் நுாலக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளார்கள். பின்பு வலிகாமம்தெற்கு பிரதேசசபை உருவாக்கம் பெற்ற பின்னர், பிரதேசசபைக்கு மக்களின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட சபையினரும் அதிகாரிகளும் காலத்துக்கு காலம் திருத்தவேலைகள், தளபாடங்கள், மின்சார உபகரண அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார்கள்.

நாட்டில் நிலவிய யுத்ம நிலமைகளால் நுாலகத்தின் பெறுமதியான புத்தகங்களுக்கும் சொத்துக்களுக்கம் நியாயமான அளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 1995 காலப் பகுதியில் நுாலகம் உடைக்கப்பட்டு நுரல்கள் வெளியில் வீசப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்பட்டன. சுமார் 1850 நுால்கள் வரையில் இழக்கப்பட்டன.

இந் நுாலகத்தில் இரவல் வழங்கல் பிரிவு, உசாத்துணை பிரிவு, சிறுவர் நுாலக பிரிவு, பத்திரிகை சஞ்சிகைகள் பிரிவு, கல்விப் பிரிவு, என்பன ஆரம்ப காலம் முதலே சிறப்பதான நிலையில் உருவாக்கப்பட்டு வார்த்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் மாதாந்த கல்வி வட்டம், கருத்தரங்கம் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்களின் சொற்பொழிவுகள், கல்வி விரிவுரைகள் நுாலகத்தில் இடம் பெற்றுவருவதுடன். கட்புல செவிப்புல சாதனங்களான வானொலி, தொலைக்காட்சி, என்பவற்றுக்கான பகுதியும் போட்டோ பிரதி செய்யும் இயந்திர வசதியும், இணைய வசதிகளுடன் கூடிய கணனிப் பிரிவும் சிறுவர்களுக்கான கணனி வகுப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

© Valikamam South Pradeshiya Sabha